mm

இது உங்கள் செய்தி...உங்களுக்காக சுவையாக..

Saturday, 18 June 2011

உப்புமா...ரூ.50 லட்சம்

உப்புமா என்றவுடன் நம்மில் பலர் முகம் சுளிப்பதைப் பார்க்கலாம். ஆனால் அந்த உப்புமாதான் அமெரிக்காவில் நடந்த சர்வதேச சமையல் கலைப் போட்டியில் இந்தியருக்கு முதல் பரிசை பெற்றுத் தந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

மும்பையை சேர்ந்தவர் கர்டோஸ். இவர் அமெரிக்காவின் நியுயார்க் நகரில் சமையல் நிபுணராக பணியாற்றுகிறார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற அமெரிக்காவின் தலை சிறந்த சமையல் நிபுணர் போட்டியில் அவர் கலந்து கொண்டார். 4 சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் இறுதி சுற்றுக்கு கர்டோஸ் முன்னேறினார்.

மிகவும் கடினமான இறுதி சுற்றில் மில்லிகென் என்ற மற்றொரு சமையல் நிபுணரை தோற்கடித்து 'சிறந்த சமையல் நிபுணர்' பட்டத்தை வென்றார்.

போட்டியில் வெற்றி பெற்றதால் ரூ.50 லட்சம் பரிசுத் தொகை அவருக்கு வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியில் கர்டோஸ் சமைத்த உணவு, ரவா உப்புமா என்பது குறிப்பிடத்தக்கது. ரவை மற்றும் காளான் ஆகியவற்றை கொண்டு அவர் இந்த உப்புமாவை தயாரித்தார்.

Friday, 17 June 2011

அவன் இவன்... திரண்டு வந்த நட்சத்திரங்கள்

பெரும் எதிப்பார்ப்புக்கிடையே நேற்று வெளியான பாலாவின் அவன் இவன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு திரண்டு வந்தனர் திரையுலகினர்.

பொதுவாக இம்மாதிரி சிறப்புக் காட்சிகள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களுக்குத்தான் பெரிய அளவில் நடக்கும்.

ஆனால் பாலா என்ற படைப்பாளிக்காக மட்டுமே, ரஜினி படத்துக்கு இணையான முக்கியத்துவம் அவன் இவனுக்குத் தரப்பட்டது. சென்னை ஏஜிஎஸ் மல்டிப்ளெக்ஸில் நடந்த இந்தப் படத்தின் பிரிமியர் ஷோவில், ஒட்டுமொத்த சினிமா உலகமே பங்கேற்றது என்றால் மிகையல்ல.

இயக்குநர் பாலா, கல்பாத்தி எஸ் அகோரம், அவன் இவன் நாயகிகள் மதுஷாலினி, ஜனனி, இயக்குநர்கள் வெற்றி மாறன், ராஜேஷ், ஹரி, சசி, மனோபாலா, பாண்டியராஜன், 'எத்தன்' சுரேஷ், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, ஜெயம் ரவி, பிரசன்னா, சினேகா, விவேக், பரத், திஷா பாண்டே, விதார்த், நாசர், சரண்யா பொன்வண்ணன், கவிஞர் நா முத்துக்குமார், அருண்விஜய் உள்பட ஏராளமானோர் வந்திருந்தனர்.

தலைப்பு செய்தி...

ஒரிஜினல் திரைக்கதை எழுதுவதைவிட எங்கிருந்தாவது சுட்டு எடுப்பதில் கில்லாடி வெங்கட்பிரபு. இதை நாம் சொல்லவில்லை... சரேஜா படம் வெளியானபோது அவரே சொன்னதுதான்.

அஜீத்தை வைத்து அவர் இப்போது இயக்கியுள்ள மங்காத்தா எந்த ஹாலிவுட் அல்லது வேறு மொழிப் படத்திலிருந்து சுடப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கான பதிலை சிலர் ஏற்கனவே எழுதியும் விட்டார்கள். இந்தியில் மேட்ச் பிக்ஸிங் பற்றி வெளியான ஜான்னெட் படத்தின் உல்டாதான் மங்காத்தா என்ற தகவல் பரபரப்பாக உலா வர, பதறிப் போன மங்காத்தா டீம் மறுப்பறிக்கையாக விட்டுக் கொண்டுள்ளது.

எந்த செய்தி வந்தாலும் அலட்டிக் கொள்ளாத மாதிரி காட்டிக் கொள்ளும் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியும் இப்போது மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.